Director Shankar

Director Shankar : தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

உயர்வாக எண்ணுதல், எண்ணிதயை முடித்தல் என அசாத்தியங்களை தனது கடின உழைப்பால் சாத்தியமாக்கிய இயக்குனர் ஷங்கரின் திரை பயணம் எந்த துறையிலும் சாதிக்க துடிக்கும் எல்லோருக்குமான பாடம்.

மீண்டும் கெட்டவனாகும் சிம்பு – இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

இந்நிலையில் ஷங்கரின் 25-ம் ஆண்டை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலரும் ஒன்று சேர்ந்து கொண்டாடியுள்ளார்கள். மிஷ்கின் ஒருங்கிணைத்த இந்த பார்டி நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

இதில் இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், வசந்தபாலன், லிங்குசாமி, சசி, பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், அட்லீ, பாண்டிராஜ், மோகன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஷங்கரை கௌரவித்தனர்.

இவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் புகைப்படமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது திரையுலகினரால் பொக்கிஷமாகவும் பார்க்கப்படுகிறது.

Shankar 25

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.