கேம் சேஞ்சர் திரைப்படத்தை நிறைவு செய்திருப்பதாக இயக்குனர் ஷங்கர் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் தற்போது கமலின் ‘இந்தியன் 2’, ராம்சரனின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார்.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில் அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

அதையடுத்து அடுத்ததாக ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறியிருந்த இயக்குனர் சங்கர் தற்போது அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் நாளை முதல் இந்தியன்2-வின் சில்வர் புல்லட் சீக்வென்ஸ் மீது கவனம் செலுத்த இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகமடைய செய்து வைரலாகி வருகிறது.