Director Shankar Movie

ஷங்கரின் அடுத்த படத்தில் இரண்டு டாப் நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் திரைப்படம் பல்வேறு தடைகளை சந்தித்து வருவதால் ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு இடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Director Shankar Movie : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஷங்கரின் அடுத்த படம் பற்றி அதிரடி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 2 தெலுங்கு நடிகர்களை வைத்து படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகரான ராம்சரண் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.