இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ட்விட் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் வித்தியாசமான ஜொனரில் படங்களை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

அனுபவத்தை பகிர்ந்த செல்வ ராகவன்!!… இணையத்தில் வெளியான வைரல் பதிவு.!

அதனைத் தொடர்ந்து மோகன் ஜி-ன் பாகாசூரனில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது twitter பக்கத்தில் மோட்டிவேஷனலான பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களை மோட்டிவேஷன் செய்து வருகிறார். அதேபோல் அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அனுபவத்தை பகிர்ந்த செல்வ ராகவன்!!… இணையத்தில் வெளியான வைரல் பதிவு.!

அதில் அவர், எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “ கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல “ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இவரது இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.