Director Saran About Ajith

சம்பளமே வாங்காமல் திரைப்படம் ஒன்று நடித்துள்ளார் தல அஜித்.

Director Saran About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் அப்டேட் எதுவும் படக்குழு வெளியிடவில்லை.

ஆனால் தல அஜித் சம்பளம் வாங்காமல் திரைப்படம் ஒன்று நடித்துள்ளதாக இயக்குனர் சரண் கூறியுள்ளார்.

அஜித் ஷாலினி இணைந்து நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் நடித்ததற்கு சம்பளமே வாங்கவில்லையாம் தல அஜித். இதனை பெருமையாக பேசியுள்ளார் இயக்குனர் சரண்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.