சிக்ஸர் பட இயக்குனர் சச்சிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Sachi in Marriage Photos : வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் திரு சச்சி. இவர் ரெமோ, கத்தி போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சதீஷின் மச்சான் ஆவார்.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

இவருக்கு நேற்று (1.9.2021) புதன்கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா MBBS பெண்னை மணந்தார். இந்தத் திருமண கொண்டாட்டத்தில் சினிமா பிரபலங்கள் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ், மிர்ச்சி சிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் P.G முத்தையா , அஜய் (நடன இயக்குனர்) , நிப்பு சாமி , நடிகை ரித்திவிகா, வென்பா, கிருத்திகா, அமுதவணன், ஆகாஷ், குரோஷி, தினேஷ் கண்ணன் , ஜோமின், விஜய் டிவி தீனா, பாலா, DSK, அஷார், தங்கதுரை, சதீஷ் KPY, அடம்ஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…!

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.