Director RDM Story for Suriya

சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் கதை இருக்கு என சூப்பர் ஹிட் இயக்குனர் ஓபனாக பேசியுள்ளார்.

Director RDM Story for Suriya : தமிழ் சினிமாவில் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் ஆர்டிஎம். இந்த படத்தில் சுரேஷ், மைம் கோபி மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

சுரேஷ் மற்றும் இயக்குனர் ஆர் டி எம் ஆகியோர் ஏற்கனவே இணைந்து அதிமேதாவிகள் என்ற படத்தில் பணியாற்றி இருந்தனர். இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் சூர்யா ரசிகர் ஒருவர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுங்கள் அது அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து இயக்குனர் ஆர்டிஎம் சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் கதை ஒன்று தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் இவர்களது கூட்டணியில் இணைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.