Director Raju Murugan's Explain for Contrversy Speech | Raju Murugan is the winner of Kukku, Joker, Gypsy and Mehndi Circusin Tamil cinema.
ரஜினி, விஜயை இயக்குனர் ஒருவர் மேடையில் கிண்டலடித்து பேசியதால் எழுந்த சர்ச்சையால் அவர் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Director Raju Murugan : தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, மெஹந்தி சர்க்கர்ஸ் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ராஜு முருகன்.

இவர் சமீபத்தில் நடந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ் சினிமாவில இளையதளபதி, சூப்பர் ஸ்டார்னு யார் யாரோ இருக்காங்க நம்ப புள்ளைக்கு ஒரு பேரை வச்சி விடுங்க என சீமானிடம் கூறினார்.

இதனால் ஆவேசமாக விஜய், ரஜினி ரசிகர்கள் பலரும் ராஜு முருகனை விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனால் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சைக்கு பதில் கொடுத்துள்ளார்.

தளபதி 65 கதை ரெடி? பிரபல இயக்குனரிடம் விஜய் வைத்த கோரிக்கை.!

ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன்.

ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள் என அவர் பதிவிட்ட பதிவில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.