சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் ராதா மோகன்.

Director Radha Mohan Interview : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராதா மோகன். வேறு படங்களை இயக்கிய இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் மலேசியா டூ அம்னீஷியா.

சிம்புவுடன் அடுத்த படமா? இயக்குனர் ராதாமோகன் வெளியிட்ட தகவல்

இந்தப் படத்தில் வைபவ் வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் படம் சமீபத்தில் ஜூ5 இணையதளம் வழியாக வெளியானது. ராதாமோகன் அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு சினிமாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்த கேள்விக்கு இது முற்றிலும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.