Director Perarasu Wishes to BJP

பாஜக தமிழகத்தில் வேரூன்றி விட்டது இனி வளரும் மலரும் திரைப்பட இயக்குனர் பதிவிட்டுள்ளார்.

Director Perarasu Wishes to BJP : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து நேற்று ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 189 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளார்.

பாஜக தமிழகத்தில் வேரூன்றி விட்டது.. இனி வளரும், மலரும் - விஜய் பட இயக்குனரின் அதிரடி பதிவு ‌

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 20 வருடங்களுக்கு பிறகு நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழக சட்டசபைக்குள் நுழைகிறது பாஜக.

இது குறித்து தமிழ் இயக்குனர் பேரரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் பாஜக வேரூன்றிவிட்டது. இனி வளரும் மலரும் என பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜக தொண்டர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அதே பணியை நெட்டிசன்கள் பலர் வாய்ப்பில்ல ராஜா எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பாஜக தமிழகத்தில் வேரூன்றி விட்டது.. இனி வளரும், மலரும் - விஜய் பட இயக்குனரின் அதிரடி பதிவு ‌