அண்ணாத்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தின் காப்பி என வெளியான மீம்ஸ் பார்த்து கடுப்பாகி உள்ளார் இயக்குனர் பேரரசு.

Director Perarasu About Annaththe Movie : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அண்ணாத்த. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் இரண்டு நாளில் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது : இன்று ஜனாதிபதி வழங்கினார்

அண்ணாத்த திருப்பாச்சி படத்தின் காப்பியா?? கொந்தளித்த இயக்குனர் பேரரசு - என்ன சொல்கிறார் பாருங்க

மேலும் அண்ணாத்த படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இதனால் இது திருப்பாச்சி படத்தின் காப்பி என சொல்லப்பட்டது. இதுகுறித்த மீம்ஸ் ஒன்றை ரசிகர் ஒருவர் வெளியிட அதனை பார்த்த இயக்குனர் பேரரசு கொந்தளிப்போடு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

படம் பார்த்து அழுதுட்டேன்! – Annaatthe Day 5 Family Audience Review | Rajinikanth, Nayanthara | HD

ஒரு படம் என எடுத்துக்கொண்டால் அதில் பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டுமே தான் இருக்கும். ஆனால் இந்த படத்தை பலர் மோசமாக கிண்டலடித்தனர். சில யூடியூப் சேனல்கள் விமர்சனங்கள் தரக் குறைவாக இருந்தது. இவை அனைத்திற்கும் அண்ணாத்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் பதில் சொல்லும் என பதிவு செய்துள்ளார் இயக்குனர் பேரரசு.

அண்ணாத்த படம் திருப்பாச்சி படத்தின் காப்பி என பலரும் கிண்டலடித்து வந்த நிலையில் திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசு இது குறித்து பதிவு செய்திருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.