director nithilan swaminathan upcoming movie
director nithilan swaminathan upcoming movie

மகாராஜா பட இயக்குனரின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது என்றாலும் வசூலில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் படத்திற்கு “மகாராணி” என்ற டைட்டிலும் வைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.