மாவீரன் திரைப்படம் குறித்த முக்கிய தகவலை இயக்குனர் மிஷ்கின் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் அவ்வப்போது பேட்டியாளர்களை சந்தித்து அப்படங்கள் குறித்த சுவாரசியமான அப்டேட்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்த நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கும் சுவாரசியமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், படத்தில் வேஷ்டி சட்டை எல்லாம் தூக்கி கலாட்டா பண்ணும் அளவிற்கு ஒரு மெயின் வில்லன் ரோலில் நடித்து இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் மாவீரன் கதை சுவாரசியமாக இருப்பதால் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றும் சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.