இயக்குனர் மிஷ்கின் ஒரு புதிய படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்குனராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தளபதி விஜயின் லியோ மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் தற்போது ஓர் புதிய படத்திற்கு இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

அதாவது, பயங்கரமான இசை பிரியரான இயக்குனர் மிஷ்கின் பல நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி இசைமேல் உள்ள தனது அன்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஆதித்யா இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவாகும் “டெவில்” திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதனை அப்படத்தின் படக்குழு போஸ்டருடன் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.