Director Mysskin Next Hero Update
Director Mysskin Next Hero Update

மிஷ்கின் இயக்கப் போகும் அடுத்த பட ஹீரோ யார் என்பது குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Director Mysskin Next Hero Update : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் மிஸ்கின். இவரது படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.

விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த இவர் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்தில் இருந்து வெளியேறினார்.

வெப் சீரியஸாக உருவாகப்போகும் வட சென்னை 2? – வெற்றிமாறன் அறிவிப்பு!

இதனையடுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மிஸ்கின் அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மிஷ்கினின் அடுத்த ஹீரோ சிம்புவா? அருண் விஜய்யா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் உண்மை என்ன? ஹீரோ யார் என்பது தெரியும்.