மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படம் மூலம் பிரபலமான இயக்குனராக மாறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த மாதம் வெளியாக உள்ள படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் விமர்சனமும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து “பைசன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்த கையோடு தனுஷ் உடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகிய “கர்ணன்” மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிறகு நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மிக முக்கியமாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாராம். சூப்பர் ஸ்டாருக்கு சொன்ன கதை பிடித்து போனதால் கூலி படம் முடிந்த கையோடு இவரது கூட்டணியில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே எந்தெந்த கூட்டணி யாரோடு எப்போது நடக்கப் போகிறது என்று அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.