இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் மணிரத்தினம். இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் மாபெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குனர் மணிரத்தினம் - தனியார் மருத்துவமனையில் அனுமதி.

இந்நிலையில் நேற்று இரவு இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டதால் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் அதில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குனர் மணிரத்தினம் - தனியார் மருத்துவமனையில் அனுமதி.

அதனால் அவரை தனி சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை கொடுத்து வருகின்றனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் தொற்று பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதால் ஓரிரு நாட்களில் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.