Director Mahendran Died
Director Mahendran Died

Director Mahendran Died : தெறி பட வில்லன் இயக்குனர் மகேந்திரன் அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக பெரிய சகாப்தமாக, திறமையான இயக்குனராக விளங்கி வருபவர் மகேந்திரன். இவர் தெறி படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாகவும் நடித்து இருந்தார்.

தற்போது 79 வயதாகும் இவர் கடந்த ஒரு மாத காலமாகவே மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் இவருக்கு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அவரது மகன் ஜான் மகேந்திரன் அவர்களும் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இவரது மறைவு இந்திய திரையுலகையே பெரும் துயரத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் மகேந்திரன் ஆன்மா சாந்தியடைய கலக்கல் சினிமா இறைவனை வேண்டி கொள்கிறது. மேலும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here