இயக்குனர் மாரி செல்வராஜ் தனது twitter பக்கத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்து இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வித்தியாசமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தற்போது “மாமன்னன்” திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க, அவருடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இசைப்புயலுடன் நெகிழ்ச்சியான தருணம்!!… மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம் வைரல்!.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாறி செல்வராஜ் தனது twitter பக்கத்தில் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவையும் பகிர்ந்து இருக்கிறார்.

இசைப்புயலுடன் நெகிழ்ச்சியான தருணம்!!… மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம் வைரல்!.

அதில் அவர், நீண்ட நாட்களாக காத்திருந்த நாள் இன்று கைகூடியுள்ளது. இசைப்புயலுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று நெகிழ்ச்சியான பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்துடன் இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.