Director Lokesh Kanagaraj Next Movie
Director Lokesh Kanagaraj Next Movie

லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Director Lokesh Kanagaraj Next Movie : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய படங்களை மூலமாக இயக்குனராக பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ்.

கைதி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போயுள்ளது.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

OMG.. விஜய்க்கு ஹிட் கொடுத்த குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தளபதி நடிக்க அஜித் தான் காரணம் – இதை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

அதுமட்டுமல்லாமல் இந்த கூட்டணி 90% உறுதியாகி விட்டதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தோடு சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருப்பதாக கூறப்பட்டு வந்ததை அடுத்து இந்த தகவல் வைரலாகி வருகிறது.

இதனால் ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் தான் கமல்ஹாசன் நடிக்க உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.