கொரானா தடுப்பு பணிகளுக்காக ரூ 10 லட்சம் வழங்கியுள்ளார் லிங்குசாமி.

Director Lingusamy Donates CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இரண்டாவது அலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவதால் கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கொரானா தடுப்பு பணிகளுக்காக ரூ 10 லட்சம் வழங்கிய லிங்குசாமி

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தாராளமாக நிதி அளியுங்கள் எனக் கேட்டுக் கொண்டதால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்த வகையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் லிங்குசாமிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.