Director Hari Reduced His Salary
Director Hari Reduced His Salary

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இயக்குனர் அறிவிப்பு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Director Hari Reduced His Salary : இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனால் திரை உலகம் முழுவதுமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த பாதிப்பிலிருந்து தமிழ் சினிமா மீண்டு புத்துயிர் பெற இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் நடிகர்கள், இயக்குனர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

நான் வாங்கி வைத்திருந்த சரக்கும் தீர்ந்து போச்சு – ஒயின் ஷாப் ஓபனிங் பற்றி வெங்கட் பிரபு ஓபன் டாக்.!

விஜய் ஆண்டனி தன்னுடைய அடுத்த மூன்று படங்களுக்கு 25 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து இருந்தார்.

அவரை தொடர்ந்து விஷ்ணு விஷால் மூன்று படங்களுக்கு மொத்த சம்பளத்தையும் விட்டுக் கொடுப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் ஹரி தான் இயக்கும் அடுத்தப் படத்திற்கான சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Director Hari Reduced His Salary
Director Hari Reduced His Salary