இயக்குனர் எச். வினோத் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து வெளியான எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி தல ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

துணிவு லேட்டஸ்ட் இன்டர்வியூ… இயக்குனர் எச்.வினோத்தின் பேச்சாள் ஓவர் குஷியில் அஜித் ரசிகர்கள்.!!

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் எச் வினோத் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், துணிவு படத்தின் அஜித்தின் லுக்கில் ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்ததற்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து மேலும் நாங்கள் வெளியிட இருக்கும் ப்ரோமோக்களை பார்த்தால் ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று புரியவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை அறிந்து குஷியான அஜித் ரசிகர்கள் அந்த புரோமோக்களை பார்க்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றனர். தற்போது இந்த தகவலும் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.