gobi

மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ என்பவர் கட்டிட தொழிலாளியின் 2 வயது குழந்தை சுர்ஜித் வில்சன் நேற்று விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 600 அடி ஆழ்துணை கிணற்றில் விழுந்து விட்டான்.

தற்போது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4 பொக்லைன் உள்ளிட்ட 5 எந்திரங்கள் மூலம் 15 அடி வரை குழி தோண்டப்பட்டு நேற்று இரவு முழுவதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துலை கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குழிக்குள் சிசிடிவி கேமாராவை பொருத்தி சிறுவனை கண்காணித்தும் வருகின்றனர்.

ஆனால், குழந்தையை மீட்க முடியவில்லை. எனவே, அதன்பின் ஐஐடி குழுவின் நவீன கருவி ஆழ்துளை கிணற்றில் செலுத்தும் பணி தொடங்கியது. அதன்பின் இறுதிக் கட்ட முயற்சியாக மெட்ரோ இரயில்வே நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறம் சிறுவன் சுஜித்தை மீட்க நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழு அதிநவீன கருவிகளுடன் மணப்பாறைக்கு விரைந்துள்ளது.

bore

கடைசியாக வெளியான தகவல் படி சிறுவன் 68 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் #Prayforsurjith என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கின் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஹேஷ்டேக்கில் பலரும் தங்களின் கவலைகளையும், சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர். அதேபோல் முகநூலில் ‘மீண்டு வா சுர்ஜித்’ என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம், பத்தாயிரம் அடி ஆழம் சென்று மீத்தேன் எடுக்கும் நாட்டில் 70 அடி ஆழம் சென்று குழந்தையைக் காப்பாற்ற தொழில்நுட்பம் இல்லை எனவும் நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுவது குறித்து திரைப்படம் எடுத்த அறம் இயக்குனர் கோபி நயினார் இதுபற்றி கருத்து தெரிவித்த போது ‘ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் தேவைப்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும். ஜேசிபி போன்ற இயந்திரங்கள், குழந்தையை மீட்பதற்கான இயந்திரம் கிடையாது என அவர் தெரிவித்தார். மேலும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க ஏன் புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.