Director Details About Thala 61
Director Details About Thala 61

தல 61 இயக்குனர் குறித்து செம மாஸான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Director Details About Thala 61 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்கிறார். வில்லனாக ஆர் எக்ஸ் 100 படத்தின் ஹீரோவான கார்த்திகேயா நடிக்கிறார்.

இன்னும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். பரவி வரும் கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தளபதி 65 தொடங்குவது எப்போது? தளபதி 66 இயக்குனர் யார்? – ஒரே நேரத்தில் வெளியான இரண்டு அப்டேட்.!!

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி படம் அடுத்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தல 61 படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தல அஜித்தின் அடுத்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை இயக்கியுள்ள சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திறமையான இயக்குனர்களுக்கு அஜித் வாய்ப்பு கொடுப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.