Cheran

Cheran Tweet : அஜித்துடன் கை கோர்த்து களமிறங்கியுள்ளார் இயக்குனர் சேரன். இது குறித்து அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் ஜனவரி 10 முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போதில் இருந்தே நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம்? என்னவெல்லாம் செய்யலாம் என திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனரும் நடிகருமான சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் விஸ்வாசம் திரையிடும் திரையரங்குகளில் எல்லாம் திருமணம் திரைப்படத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

ஒப்புதல் தந்த சத்யஜோதி நிறுவனத்துக்கும் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கியூப் நிறுவனத்துக்கும் நன்றி.. விஸ்வாசம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.