Director Bala New Film
Director Bala New Film

Director Bala New Film – ஒருவழியாக வர்மா சர்ச்சையில் இருந்து பாலா தற்போது மீண்டு வந்துவிட்டார். இதைதொடர்ந்து ஒரு மிரட்டலான படத்துடன் களமிறங்க வேண்டும் என திட்டமிட்ட பாலா, அதற்காக சூர்யாவுடன் பேசி வருவதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

ஆனால் சூர்யா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அதற்கு முன்பாகவே வேறொரு படத்தை துவங்க பாலா திட்டமிட்டுள்ளாராம்.

இதில் ஆர்யா மற்றும் அதர்வா நாயகர்களாக நடிக்கிறார்கள். மேலும் பரதேசி, நாச்சியார் படங்களில் பாலாவுடன் பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் முதலில் போட்டியாளராக இருந்த பிந்து மாதவிதான் இப்படத்தின் நாயகியாம். இதை இவரே சமீபத்தில் கூறியுள்ளார்.

இந்த படம் போக கழுகு இரண்டாம் பாகமும் பிந்து மாதவி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bindu Madhavi
Bindu Madhavi