Director Atlee Salary for Bollywood Movie

சம்பளத்தில் தன்னுடைய குரு ஷங்கரையே மிஞ்சியுள்ளார் இயக்குனர் அட்லி.

Director Atlee Salary for Bollywood Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவரது இயக்கத்தில் இறுதியாக மெர்சல் திரைப்படம் வெளியானது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தொடர்ந்து அட்லி அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்தப் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநலையில் தற்போது இப்படத்திற்காக அட்லி வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அட்லியின் சம்பளம் ரூபாய் 40 கோடி என பேசப்பட்டு வந்த நிலையில் ரூபாய் 35 கோடிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் வாங்கும் அதிகபட்ச சம்பளமே ரூபாய் 25 கோடி தான். தற்போது பாலிவுட் படத்தின் மூலமாக தன்னுடைய குரு ஷங்கரின் சம்பளத்தையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் இயக்குனர் அட்லி.