Ameer
விஜய் வீட்டில் IT ரைடு நடக்க காரணம் என்ன என்பது பற்றி இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.

Director Ameer Comment on IT Raid in Vijay Home : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வீட்டில் திடீரென நடத்தப்பட்ட IT ரைடு திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த ரைடின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

ஏற்கனவே பல பிரபலங்கள் ரைடு குறித்து பேசி வந்த நிலையில் தற்போது இயக்குனர் அமீரும் ரைடு பற்றி பேசியுள்ளார்.

நேற்று நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் பாஜக காலூன்ற விஜய் தடையாக இருப்பார் என கருதி ரைடு நடத்தி இருக்கலாம்.

ஆனால் இது போன்ற செயல்பாடுகள் விஜயை இன்னும் வளர்ச்சியடைய செய்யும். அவர் அரசியலுக்கு வந்தால் நான் நிச்சயம் வரவேற்பேன் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.