நடிகர் அஜித்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தில் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் நள்ளிரவில் ஒரு மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது துணிவு.

அஜித்துடன் இணைய தயார், ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் - தில் ராஜு ஓபன் டாக்.!!

இந்த படத்துக்கு போட்டியாக தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. தில் ராஜு தயாரிப்பில் வெளியான இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படமும் சரிசமமான அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தில் ராஜூ பேட்டி ஒன்றில் அஜித்துடன் இணைவது குறித்து பேசிய தகவலும் பரவி வருகிறது.

அதாவது அஜித் சாருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன், ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான் அது என்னவென்றால் நல்ல கதையாக அமைய வேண்டும் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் இணைய தயார், ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் - தில் ராஜு ஓபன் டாக்.!!

தில் ராஜு அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.