Dil Bechara Movie Trailer Record
Dil Bechara Movie Trailer Record

விஜயின் பிகில் அவெஞ்சர்ஸ் என்டு கேம் பல சாதனைகளை ஒரே நாளில் தூக்கி சாப்பிட்டுள்ளது சுஷாந்த் சிங்கின் கடைசி பட ட்ரெய்லர்.

Dil Bechara Movie Trailer Record : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங். தோனியின் வாழ்க்கை வரலாறு படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக வலம் வரத் தொடங்கினர்.

ஆனால் வாரிசு நடிகர்கள் கொடுத்த அழுத்தத்தால் வாய்ப்புகளை இழந்து ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் மறைவிற்குப் பிறகு சுஷாந்த்தின் கடைசி படமான தில் பாச்சாரே திரைப்படம் வெளியாக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

கோப்ரா படத்தில் இடம்பெறும் கொடூர காட்சி.. உயிரைப் பணயம் வைத்து நடித்ததால் விக்ரமுக்கு ஏற்பட்ட சோகம் – வெளியான அதிர்ச்சி!

இதனையடுத்து தயாரிப்பாளர் அந்த படத்தை ஹாட்ஸ்டார் இல் வெளியிட முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

அதன்படி இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை 4 மணிக்கு வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் இந்த ட்ரைலரை 2.50 கோடி பேர் பார்த்துள்ளனர். 5 லட்சம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் அவெஞ்சர்ஸ் என்டு கேம் படத்தின் டிரைலர், பிகில் பட ட்ரெய்லர் என அனைத்து சாதனைகளையும் முறியடித்து இந்த படத்தின் டிரைலர் புதிய சாதனை படைத்துள்ளது.