நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா பட டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dikkiloona Trailer Announcement : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல நூறு படங்களில் நடித்தவர் சந்தானம்.

இவர் தற்போது காமெடியை மையமாக கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது டிக்கிலோனா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்தின் டிரைலரை ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.