Diabetes

Diabetes : சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியுமா? என்றால் நிச்சயம் அது கேள்வி குறி தான் என்பது பலரின் பதிலாக இருக்கும்.

ஆனால் இந்த உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம், முடிந்தால் முற்றிலுமாகவும் குணமடையவும் வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோய்

கணையத்தில் உள்ள பீட்டா செல்கள், இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது தான் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுகிறது .இதையே சர்க்கரை நோய் என்று கூறுகிறோம்.

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் :

அதிக தாகம் ,பசி அடிக்கடி எடுப்பது, சிறுநீர் அடிக்கடி கழித்தல் ,உடல் எடை கூடுதல், உடல் எடை திடீரென்று குறைதல், தோலில் நமைச்சல் ஏற்படுதல், தோல் அரிப்பு.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள் :

1. பாகற்காய் :

பாகற்காயில் “காரன்டின் “என்ற சத்துப்பொருள் நிறைந்துள்ளது .இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் “லெக்டின்”என்னும் வேதிப்பொருள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

2. வெந்தயம் :

வெந்தயம் நார்ச்சத்து மிகுந்த ஒரு பொருள். வெந்தயத்தை தினசரி உணவில் சேர்ப்பது மிக அவசியம். இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வெந்தயம் உதவுகிறது.

3. நெல்லிக்காய் :

நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. தினமும் 2 நெல்லிக்காய் எடுத்தால் சர்க்கரை அளவை முழுமையாக குறைக்க முடியும்.

4. கறிவேப்பிலை :

கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. தினமும் 10 கருவேப்பிலை வீதம் 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோயும், பரம்பரையால் ஏற்படும் சர்க்கரை நோயும் குணமாகும்.

5. வெண்டக்காய் :

வெண்டைக்காயில் வைட்டமின் Kஆன்டி-ஆக்ஸிடன்ட் ,பாஸ்பரஸ்நிறைந்துள்ளன.

6. முருங்கை கீரை :

முருங்கை கீரையில் “ஆஸ்கார்பிக் ஆசிட் “நிறைந்து உள்ளன .இவை இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

7. உடற்பயிற்சி :

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது தியானம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிக
அவசியமான ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here