Dhruva Natchathiram Movie Update
Dhruva Natchathiram Movie Update

நடிகர் விக்ரம் இல்லாமல் துருவ நட்சத்திரம் படத்தின மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளது படக்குழு.

Dhruva Natchathiram Movie Update : தமிழ் சினிமாவின் திறமையான நடிகராக வலம் வரும் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படம் இன்னும் முடிவடையவில்லை.

தற்போது கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது துருவநட்சத்திரம் படத்தில் காட்சிகள் விக்ரம் இல்லாமல் எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கேற்றார் போல் படத்தின் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

54 வயதில் இப்படியா?? மிரட்டலான சிக்ஸ் பேக்குடன் புதிய லுக்கில் விக்ரம், அவருக்குப் போட்டியாக துருவ் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!(Opens in a new browser tab)

ஆனால் படக்குழு இந்த தகவல் முற்றிலும் தவறானது. கொரானா பரவல் முடிவடைந்து ஷூட்டிங் தொடங்கியதும் நிச்சயம் விக்ரம் கலந்து கொள்வார்.

விக்ரம் துருவநட்சத்திரம் படத்தில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். விக்ரம் ரசிகர்களும் ஸ்டைலிஷாக உருவாகிவரும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.