விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு துருவ நட்சத்திரம் படக்குழு வெளியிட்டு இருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பொன்னியன் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. சில காரணங்களால் தள்ளி போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து படகுழு சமீபத்தில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு ‘துருவ நட்சத்திரம்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.