துருவ் விக்ரமின் மூன்றாவது படம் பற்றி ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Dhruv Vikram Upcoming Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய அப்பா சியான் விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக தற்போது தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு மூன்றாவதாக இவர் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், துருவ் விக்ரம் அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத ஒருவரின் இயக்கத்தில் நடிக்கவுளளார்.

அதாவது பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக இயக்குனராக பிரபலமாகி தற்போது தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கியுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திரையுலகை மிரள வைத்த விக்ரமின் டாப் 15 திரைப்படங்கள் – பிரபல இணையதளம் வெளியிட்ட லிஸ்ட்.!!

இந்தப் படத்தில் இன்னும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் துருவ் விக்ரமுக்கு இது மூன்றாவது திரைப்படம், இயக்குனர் மாரி செல்வராஜ்க்கும் இது மூன்றாவது திரைப்படமாகும்.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.