Dhruv Vikram sings Nayanthara song : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Chiyaan Vikram

Dhruv Vikram sings Nayanthara song :

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

இதுதான் துருவ் விக்ரமின் முதல் படம் என்றாலும் ஏற்கனவே அவர் சில குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இதுபோக தற்போது பாடகராகவும் தன்னை துருவ் அடையாளப்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் பாடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

தளபதி 63 இரட்டை வேடத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? முதல்முறை விஜய் செய்யும் விஷயம்!

இதைத் தொடர்ந்து தற்போது நயன்தாராவின் தங்கமே உன்னத்தான் பாடலையும் பாடி அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆதித்ய வர்மா படப்பிடிப்பு முடிந்ததால் கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.