Dhruv Vikram Next Movie
துருவ் விக்ரமின் அடுத்த பட இயக்குனர் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Dhruv Vikram Next Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்குவில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலமாக ஹீரோவானார்.

முதல் படமே துருவ்விற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது, அவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது. இருப்பினும் இதுவரை துருவ்வின் அடுத்த படம் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் தான் முதல் முறையாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது துருவ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் E4 என்டர்டைன்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது பற்றி இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.