துருவ் விக்ரம்

நட்ட நடு ராத்திரியில் துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்துள்ளது.

துருவ் விக்ரம் புகைப்படம் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருடைய ஒரே மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

நட்ட நடு ராத்திரியில் துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்.. மிரண்டு போன ரசிகர்கள் - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.!!

இப்படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் அமைப்பை கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிரட்டலான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பா எட்டடி பாஞ்சா நீங்க பதினாறு அடி பாய்வீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.