Dhoni Retirement : Sports News, Virat Kohli, Latest Sports News, India, Sports, Latest Sports News, dhoni press meet, Dhoni Press Conference

Dhoni Retirement :

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக விளங்கிய தோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே விமர்சகர்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

அதே சமயம் ரசிகர்கள் அவர் ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகின்றனர்.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் தல தோனி.

அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.

மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடரில் தோனி பெயர் எடுக்கப்பட்ட வில்லை.

எனது பங்கு இந்த உலக கோப்பை போட்டியில் வேறு விதமானது – கோலி பேட்டி

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2016-ல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், தோனியுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

அந்த போட்டியை நினைவு கூர்ந்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. அது எனக்கு ஒரு ஸ்பெஷல் நைட். தோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டுள்ளார்.

தோனியுடனான முக்கியமா நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால், தோனி ஓய்வை எடுக்க முடிவெடுத்து இருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.