கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முதல் படத்தை தயாரித்து வருகிறது.

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க நதியா, லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை படகுழு அண்மையில் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு “லெட்ஸ் கெட் மேரிட்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு சிறப்பு வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.