Dhoni Movie Director about Sushant Singh
Dhoni Movie Director about Sushant Singh

தோனியின் வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகம் குறித்து சுஷாந்த் மரணம் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் பேசினார்.

Dhoni Movie Director about Sushant Singh : இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோணியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சுஷாந்த்.

சில தினங்களுக்கு முன்னர் இவர் மன உளைச்சல் காரணமாக தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் இது குறித்து பேசி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்ளப் போவதை முன்னரே தெரிவித்த சுஷாந்த் சிங், கண் கலங்க வைக்கும் கடைசி பதிவு – என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்த நிலையில் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய இயக்குனர் அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் சுஷாந்த் குறித்தும் பேசியுள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சுஷாந்த் ஒவ்வொரு காட்சியையும் பயந்து கொண்டே நடித்தார். தவறாக நடித்துவிட்டால் தோனியின் ரசிகர்கள் நிச்சயம் நன்மை விடுவார்கள் என அவர் ஒரு வித பயத்துடனே அனைத்தையும் நுணுக்கமாக கவனித்து நடித்தார் என கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குனர் தற்போது வரை அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. மேலும் இல்லாமல் இரண்டாம் பாகம் என்பது நடக்காத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.