Dhoni Interview
இந்திய முன்னாள் கேப்டன் தோனி ஒரு பேட்டியில் எனக்கும் மற்றவர்களை போல கோபம் வரும் என்று கூறியுள்ளார்.

Dhoni Interview : தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார் தோனி. அப்போது அவர் தனது கோபத்தை பற்றி கூறினார்.

தோனி கூறியது :

எல்லோரையும் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்கும் கோபம் வரும். ஆனால் நான் கோபத்தை கட்டுப்படுத்துவதால் அது வெளியே தெரிவதில்லை.

கோபம் மட்டுமின்றி வெறுப்பும் ஏற்படும். ஆனால் அவற்றில் இருந்து விரைவில் மீண்டுவிடுவேன்.

நான் ஒரு பிரச்சனையை ஆராய்வதைவிட அதற்கான தீர்வை தேடவே நினைப்பேன். இதுவே என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான வழியாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் எந்த போட்டிலும் விளையாடாமல் இருந்து வரும் தோனி இரண்டு மாதம் ராணுவ பயிற்சி மேற்கொண்டார்.

அனைவரும் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க, அதற்கும் தோனி தனது உணர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here