Dhokla Dish :
Dhokla :

Dhokla Dish :

டோக்ளா என்றால் ஏதோ வித்யாசமான உணவு, செய்வது கடினம் என்று நினைப்பவர்களுக்கு இதோ ஒரு எளிய முறையில் சாதரணமாக மாலை நேர ஸ்னாக்ஸாக குழைந்தகளுக்கு செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

1. தயிர் – சிறிய கப்

2. கடலை மாவு – 1 கப்

3. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

4. ஃப்ரூட் சால்ட் – 3 ஸ்பூன்

5. தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்

6. சீரகம் – 1 ஸ்பூன்

7. பச்சை மிளாய் -2

8. கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

9. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

முதலில் ஒரு சிறிய பாத்திரதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் ஃப்ரூட் சால்ட் போட்டு கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு பாத்திரதில் புளித்த தயிர் ஊற்றி அதில் கடலை மாவு, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஃப்ரூட் சால்ட் கலவை மற்றும் தயிர் கலவைகளை ஒன்றாக கலந்து அதனை நெய் தடவிய தட்டில் பரப்பி வெக வைத்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்

மற்றொரு, பாத்திரதில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள டோக்ளா துண்டுகளை போட்டு களரி பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேங்காய் துருவல் தூவி இறக்கினால் சுவையான டோக்ளா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here