Dhilluku Dhuttu 2

Dhilluku Dhuttu 2 : ஆதரவற்ற குழந்தைகளுடன் சேர்ந்து தில்லுக்கு துட்டு 2 படத்தை சந்தானம் பார்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையால் இன்று நாயகனாக வலம் வருபவர் சந்தானம்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

தளபதி 63 படத்தில் விஜயுடன் நடிக்க யோகி பாபுவுக்கு இவ்வளவு சம்பளமா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சந்தானம் ஆதரவற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் பார்க்க உள்ளார்.

சந்தானத்தின் இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதற்காகவே படம் வெற்றி பெற வேண்டும் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தை ராம்பாலா இயக்க சந்தானத்தின் ஹாண்ட் மேட் பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.