Dhilluku Dhuddu 2

Dhilluku Dhuddu 2 Collection : தில்லுக்கு துட்டு 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 3 நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற நிலவரமும் தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருபவர் சந்தானம்.

இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளிலேயே சென்னையில் ரூ 40 லட்சம் வசூலித்து இருந்த இந்த திரைப்படம் மூன்று நாளில் ரூ 1.38 கோடி வசூல் செய்துள்ளது.

அதே போல் தமிழகம் முழுவதையும் சேர்த்து தற்போது வரை ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் எப்படியும் ரூ 10 கோடிக்கு மேல் வசூல் செய்து விடும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.