வாரிசு பட ரிலீஸ்க்காக துணிவு படம் விநியோகிஸ்தர்களை சந்திக்க உள்ளார் தில் ராஜு.

Dhill Raju Plan on Varisu Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தில் நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன.

அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இதன் காரணமாக வாரிசு படத்தை காட்டிலும் துணிவு திரைப்படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இப்படியான நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் வாரிசு படத்துக்கு கூடுதல் திரையரங்குகளை ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி மற்றும் துணிவு பட விநியோகஸ்தர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.