டூப் போட மறுத்து ஸ்டன்ட் காட்சியில் துணிச்சலாக நடித்து மிரட்டியுள்ளார் அஜித்.

Dhilip Subbarayan About Valimai Stunt : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தன் வலிமை.

உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி..

இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்தினை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேடையில் படத்தின் கதையை உளறிய நக்கீரன் கோபால் – பதறிப்போன Sathyaraj

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் இதில் இடம்பெற்றிருந்த பைக் ஸ்டன்ட் காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. இந்த காட்சியில் நடிக்கும்போது தல அஜித் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றார்.

தற்போது இந்த காட்சி குறித்து பேசியுள்ளார் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். இந்த காட்சியில் அஜித்தை டூப் போட்டு நடிக்க சொன்னேன். ஆனால் அவர் வேண்டாம் என்னுடைய ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் என கூறி துணிந்து நடித்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.