Dhileep Master About Valimai Stunt Sequence

வலிமை படத்தின் ஸ்டன்ட் காட்சிகள் குறித்து செம மாஸ் ஆன அப்டேட்டை கொடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

Dhileep Master About Valimai Stunt Sequence : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90% முடிவடைந்துள்ளன. இன்னும் பத்து சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. ஆனால் மீண்டும் கொரானா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவத் தொடங்கியதால் படக்குழு கொஞ்சம் அமைதி காத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த இடைப்பட்ட காலத்திற்குள் படத்தின் டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகளை முடித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ள திலீப் சுப்பராயன் படம் பற்றிய ஒரு மாஸான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தை விட நான்கு மடங்கு மாஸான ஸ்டன்ட் காட்சிகள் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திலீப் சுப்பராயன் மாஸ்டர் இவ்வாறு தெரிவித்திருப்பது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.