விஜயை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளார் தில் ராஜு.

தெலுங்கு திரை உலகில் பிரபல தயாரிப்பாளர்களின் ஒருவராக இருந்து வருபவர் தில் ராஜு. இவரது தயாரிப்பில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள திரைப்படம் வாரிசு.

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தில் ராஜு தமிழில் நடிகர் ஒருவருடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆமாம் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து தான் தில் ராஜு அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த ஹரிசங்கர் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் உருவாவதைத் தொடர்ந்து அடுத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.